Press "Enter" to skip to content

அரசியல் கைதிகளை பொசன் போயாவில் விடுதலை செய்யவும்

அரசியல் கைதிகள் பற்றி, கடந்த 11 வருடங்களாக பேசிக்கொண்டிருக்கின்றோம். எதிரணியில் இருக்கும் எங்களுடைய அழுதங்களால், 100 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்,  ​பொசன் போயா தினத்தன்று, முடிந்தால் சிலரை விடுதலைச் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

 அரசியல் கைதிகளை விடுதலைச் செய்வோம், விடுதலைச் செய்வோமென தொடர்ந்துக் கூறிகொண்டிருக்காது. முடிந்தால் அவர்களை விரைவில் விடுதலை செய்துக்காட்டுங்கள் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார்.

அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள், கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவின் சமூகவலைத்தளப் பதிவையும் சுமந்திரன் சுட்டிக்காட்டி உரையாற்றியதால், சுரேன் ராகவனுக்கும் சுமந்திரனுக்கும் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: