Press "Enter" to skip to content

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை மீது முறிகண்டி வர்த்தகர்கள் குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள, வர்த்தக நிலையங்கள் சீரமைக்கப்படாத நிலையில், கொரோனா காலத்திலும் வருமான வரி அறவீடு செய்யப்படுவதாக, வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொரோனா பரவல் நிலையில், மக்களின் வருகை மிக மிக குறைவாக காணப்படுவதாகவும், மாதாந்தம் ஆயிரம் ரூபா பிரதேச சபையினால் அறவிடப்படுவதாக, வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலத்தில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கச்சான் கடைகள், இன்று உக்கி விழும் அபாயத்தில் காணப்படுகின்றன.

இந்த நிலையில், நிரந்தர கட்டட வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறு, புதுக்குடியிருப்பு பிரதேச சபையிடம் கோரிய போதும், இன்று வரை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

கடைகள் மூடப்பட்ட நிலையில், தமது வியாபார பொருட்களை, பிராணிகள் அழித்து வருவதாகவும், பிரயாணிகள் வருகை தரும் போது, கடைகளின் நிலை குறித்து கவலைகளை வெளிப்படுத்துவதாகவும், வர்த்தகவர்கள் கவலை வெளியிட்டனர்.

இவ்வாறான தருணத்தில், முன்னாள் போராளியான தனக்கு, வாழ்வாதாரத்துக்காக இடம் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், தற்காலிக கடையை, தானே அமைத்த நிலையில், இன்று அது சேதமடைந்துள்ளதாக, முன்னாள் போராளி குறிப்பிட்டார்.

இதனால், வர்த்தக செயற்பாடுகளுக்கு ஏற்ற வகையில், நிரந்தர கடைகளை அமைத்து தருமாறும், தற்கால சூழலில் வரி அறவீட்டை இடை நிறுத்துமாறும், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: