Press "Enter" to skip to content

இலங்கையில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதோடு கருத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- ஜீ.எல்.பீரிஸ்

இலங்கையில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதோடு, கருத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகம், நாடாளுமன்றம் என அனைத்து தளங்களிலும் பரந்த ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் எதிர்வரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் மீறல் இடம்பெறுகின்றனவா என்பதை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கை மிகவும் பெறுமதி வாய்ந்தது. அதனைவிட காணாமல் போனோர் குறித்த அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 16 பேரை விடுவித்துள்ளோம். மேலும் பலரை விடுவிப்பது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

எனவேசர்வதேசத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. அதனைவிட இந்த அனைத்து விடயங்களுக்கு ஜனநாயக கொள்கைக்கேற்ப செயற்படுத்தப்படுகின்றன.

நாடாளுமன்றத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சபை ஒத்திவைப்பு வேளையிலும் கேள்வி கேட்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் பரந்த ஜனநாயக ரீதியிலான கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்தில் மாத்திரமல்ல, சமூகத்தின் அனைத்து தரப்புக்கும் இந்த ஜனநாயக சுதந்திரத்தை வழங்கியுள்ளோம்.

ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெகுஜன ஊடகங்கள் மாத்திரமல்ல, சமூக ஊடகங்களிலும் விமர்சனங்களை எதிர்நோக்குகின்றோம்.
கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க மக்களின் ஆர்ப்பாட்டங்களை தடுக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தாலும், அதற்கு நீதிமன்றம் இணங்கவில்லை.

காரணம் அது மக்களின் அரசியல் யாப்பு ரீதியிலான உரிமை என நீதிமன்றம் அறிவித்தது. எனவே அனைத்து பக்கத்திலும் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: