Press "Enter" to skip to content

சர்வதேச கடலில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் குறித்து வௌியான தகவல்!

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் சர்வதேச கடலில் பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 7 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் இருந்து 301 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு மீன்பிடி படகு ஒன்றில் குறித்த ஹெரோயின் தொகை எடுத்துச் சென்ற 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த படகினை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பொலிஸிற்கு கிடைக்கப்பெற்ற விசேட புலனாய்வுத் தகவல் ஒன்றிற்கு அமைய இலங்கை கடற்படையால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: