Press "Enter" to skip to content

தாய், தந்தை, பாட்டி, தங்கையை துடிதுடிக்க கொலை செய்த மாணவன்

தாய், தந்தை, பாட்டி, தங்கை ஆகியோரை துடிதுடிக்க கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறதுஅம்மாநிலத்தின் ரோகித் நகரில் வசித்து வந்தவர் பிரதீப் மாலிக்(45). இவரது மனைவி சந்தோஷ் பப்லி(40). மகள் நேகா(19). தாயார் ரோஷ்ணிதேவி இவரது மகன் அபிஷேக் மாலிக்(20).

மகனுக்கும் பிரதீப் மாலிக்கிற்கும் தொழில்ரீதியாக ஏற்பட்ட தகராறு காரணமாக அபிஷாக் குமார் வீட்டில் இருந்து வெளியேறி தனியாக வசித்து வந்திருக்கிறார் . இந்நிலையில் கடந்த 27ம் தேதி அன்று வீட்டிற்கு வந்த அவர் தனது தந்தையிடம் தகராறு செய்திருக்கிறார். தகராறின் போது எழுந்த ஆத்திரத்தில் தந்தை என்றும் பாராமல் அவர் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்.

தந்தை துடிதுடித்து இருந்திருக்கிறார். இதை பார்த்து பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த தாய், பாட்டி ,தங்கை ஆகியோரை துப்பாக்கியால் சுட தாயும், பாட்டியும் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்கள். தங்கை நேகா ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்திருக்கிறார். இதைன்பின்னர் அபிஷேக் மாலிக் தப்பி ஓடியிருக்கிறார்.

அக்கம்பக்கத்தினர் சத்தத்தை வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் வந்து பார்த்தபோது நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார்கள். அதில் நேகா மட்டும் உயிருடன் இருப்பதை அறிந்து போலீசார் அவரை மட்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரண்டு நாளில் நேகாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: