Press "Enter" to skip to content

தொற்றாளர்களை அழைத்துச் செல்ல ஓட்டோக்கள் சேவையில்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தொற்றாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதில் வாகனப் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே இதனைக் கருத்திற்கொண்டு தொற்றாளர்களை அழைத்துச் செல்லும் பணியில் ஓட்டோக்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதன் முதற்கட்டப் பணிகள் கேகாலை மாவட்டம் வரகொட பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கேகாலை சுகாதார சேவைகள் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கேகாலை உள்ளிட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்களை அழைத்துச் செல்வதில் போதிய வாகனங்கள் இன்மையால் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளாதாகவும் இதன் காரணமாக ஓட்டோக்களை சேவையில் இணைத்துக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: