Press "Enter" to skip to content

லண்டனில் வங்கி வளாகங்களில் நிர்வாண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சுழல் ஆர்வலர்கள்!

சில எரிபொருள் நிறுவனங்களுடனான உறவை துண்டிக்கக் கோரி, சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் அமைப்பின் குழு ஒன்று நேற்று லண்டன் நகரில் நிர்வாண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானியாவில், காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, சமூகம் மற்றும் சுற்றுச்சுழல் அபாயங்களை ஏற்படுத்தும் அரசாங்க நடவடிக்கைகளை எதிர்த்து, Extinction Rebellion எனும் அகிம்சைவழி சிவில் ஒத்துழையாமை இயக்கம் ஒன்று இயங்கி வருகிறது.

சுருக்கமாக ‘XR’ என அழைக்கப்படும் இந்த இயக்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியுள்ளது.

 

இந்நிலையில், இந்த இயக்கத்தில் உள்ள சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் சிலர், நேற்று லண்டனில் உள்ள HSBC வங்கி வளாகத்திற்குள் நுழைந்து நிர்வாணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நகரத்தில் உள்ள பல வங்கிகளின் வாசலிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கிகள், புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுடனான கூட்டணியை துண்டிக்கக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெறும் முகக்கவசம் மட்டுமே அணிந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்கள் உடம்பில் ‘Stop Funding Death’, ‘Morally Bankrupt’ மற்றும் ‘Blood Money’ என வாசகங்களை எழுதியிருந்தனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: