Press "Enter" to skip to content

இன்று இதுவரையில் 3,308 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 744 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 2, 564 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதற்கமைய, இன்று இதுவரையில் 3,308 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 462,767 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 2,081 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 384, 557 ஆக அதிகரித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: