Press "Enter" to skip to content

கஞ்சிகுடிச்சாறு விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில் இருந்து துப்பாகிகள் மீட்பு!

அம்பாறை கஞ்சிக்குடியாற்றில் விடுதலை புலிகளின் பயிச்சி முகாமாக இருந்த பகுதியில் எல்.எம்.ஜீ, துப்பாக்கி மற்றும் உள்ளூர் தயாரிப்பு துப்பாகிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (5) மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வு பிரிவு திருக்கோவில் பிரதேச பெறுப்பாளருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து திருக்கோவில் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பெறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான பொலிசார் விசேட புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கஞ்சிக்குடியாற்றில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில் இருந்த மலசல கூடத்துக்கு அருகில் கைவிடப்பட்டு துரப்பிடித்த எல்.எம்.ஜீ ரக துப்பாக்கி ஒன்றை மீட்டனர்.
அதேவேளை அந்த பகுதியிலுள்ள மலைகுகையில் இருந்து உள்ளூர்தயாரிப்பு துப்பாகி இரண்டை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கிகள் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: