Press "Enter" to skip to content

கொரோனாவால் அரசாங்கத்துக்கு 1,600 பில்லியன் ரூபா வருமானம் இழப்பு – நிதியமைச்சர்

உலகம் முழுவதும் கொவிட் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இவ்வருடம் 1,600 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்துக்கு மறைமுக வரிகள் மூலமாக கிடைக்க வேண்டிய 1,600 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பன தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளதால் அதனூடாக கிடைக்க வேண்டிய வருமானமும் இல்லாதுபோயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும், சர்வதேச நாணய நிதியத்துடனும் கலந்துரையாடி வருவதாகவும், இதன்போது, சலுகை கடன் முறைமை தொடர்பில் மாத்திரம் அவதானம் செலுத்துவதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: