Press "Enter" to skip to content

உலகின் முதல் 500 இடங்களில் ஒன்றாக பேராதெனிய பல்கலை தரமுயர்வு

2020 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரப்படுத்தலில் முதல் தடவையாக பேராதனை பல்கலைக்கழகம் 401-500 வரையான தரத்தில் இடம் பிடித்துள்ளது. 2018 இல் 801-1000 வரையான தரப்படுத்தலில் காணப்பட்ட கொழும்புப் பல்கலைக்கழகம் 1000+ தரத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த 1000 பல்கலைக்கழகங்களில் இலங்கையின் இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் மட்டுமே உள்வாங்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள 15  பல்கலைக்கழகங்களில் களனி, மொரட்டுவ, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகங்கள் இவ்வருடம் 1000 இடங்களுக்குள் இடம் பெறத் தவறியுள்ளன.

2020 இன் தரப்படுத்தலில் இந்தியாவின் 56, மலேஷியாவின் 16, தாய்லாந்தின் 13, இந்தோனேஷியாவின் 6, சிங்கப்பூரின் 2 பல்கலைக்கழகங்கள் அடங்குகின்றன. 92 நாடுகளின் 1400 பல்கலைக்கழகங்கள் 2020 இன் தரப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

விரிவுரை, ஆய்வு, அறிவுப்பரிமாறல், சர்வதேச ஈர்ப்பு போன்ற 13 துறைகள் தரப்படுத்தலுக்காக அவதானிக்கப்படுகின்றன. வெளிப்படுத்தப்பட்டுள்ள தரப்படுத்தல் அறிக்கையின் படி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முழுநேர சமநிலை (FTE) மாணவர்களின் எண்ணிக்கை 17,482 ஆகும். மாணவர்களுக்கான பணிக்குழாமின் எண்ணிக்கை 10.8 ஆகும். ஸ்ரீஜயவர்தன பல்கலைக்கழகத்தில் இது 23,322 உம், 29.6 மாகும். இரு பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கும் ஆண்களுக்குமான விகிதம் 61 :39 ஆகும்.

உலகின் சிறந்த 10 பல்கலைக்கழகங்களில் முறையே ஒக்ஸ்போட் (இங்கிலாந்து), கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னோலொஜி (அமெரிக்கா), கேம்பிரிட்ஜ் (இங்கிலாந்து), அமெரிக்காவின் ஸ்டன்பர்ட், மசசூ இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னோலொஜி, பிரின்ஸ்டன், ஹாவார்ட், யேல், சிகாகோ, இங்கிலாந்தின் இம்பீரியல் கொலேஜ் ஆகியன அடங்குகின்றன.

உலக தரப்படுத்தலில் இலங்கையின் 15 பல்கலைக்கழகங்களில் இரண்டு பல்கலைக்கழகங்களே உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: