Press "Enter" to skip to content

தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதில் யாழில் மக்கள் தயக்கம்

யாழ்ப்பாணத்தில் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதில் பொதுமக்கள் சற்று தயக்கம் காட்டுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில், இதுவரையில் 281 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், 18 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாகவும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: