Press "Enter" to skip to content

ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு

நியுயோர்க்கில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்பார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுச் சபை கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவதும் நாட்டில் இருந்து வெளியேறி கூட்டத்தொடர் ஒன்றில் பங்கேற்பதும் இதுவே முதற்தடவையாகும்.
குறித்த விஜயத்தின்போது, ஜனாதிபதி, துறைசார் ராஜதந்திரிகளை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது தனிப்பட்ட கொள்கை மற்றும் நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு குறைந்தளவிலான தரப்பினருடன் இந்த விஜயத்தை முன்னெடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: