Press "Enter" to skip to content

வவுனியாவில் 35 பேருக்கும் பசறையில் 38 பேருக்கும் கொவிட் தொற்று!

வவுனியாவில் 35 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார அதிகாரி பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனை முடிவுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தொற்று உறுதியானவர்களை கொவிட்-19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் 38 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அண்மையில் 43 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ. ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகளுக்கமைய தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, தொளும்புவத்தைப் பகுதியில் 23 பேர் அடங்கலாக 38 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதியானதாக சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையாளர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: