Press "Enter" to skip to content

இலங்கைக்கு மேலும் 04 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன

இலங்கைக்கு அடுத்த மாதம் 04 மில்லியன் பைசர் தடுப்பூசி கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு செலுத்துவதற்காக மேற்படி பைஸர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை நாற்பட்ட நோய்களுடன் வாழும் பிள்ளைகளுக்கான தடுப்பூசி ஏற்றும் திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு குழந்தைகள் மருத்துவமனையில் ஆரம்பமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: