Press "Enter" to skip to content

தனிநபரை மாற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாது- சிறிசேன

தனி ஒருவரை மாற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக எந்த துறைகளை அபிவிருத்தி செய்யவேண்டும் என்பது குறித்து நிபுணர்களும் கொள்கை வகுப்பாளர்களும் இணைந்து ஆராயவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒரு நபரை மாற்றுவதால் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது தொடர்புள்ள அனைத்து தரப்பினரும் ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவான அபிவிருத்தி கட்டமைப்பே இந்த பிரச்சினைக்கான தீர்வு என மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.
இது ஒருநாளில் தீர்வு காணக்கூடிய பிரச்சினையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: