Press "Enter" to skip to content

பிரபல வர்த்தக பிரமுகரான தந்தையின் கொலை தொடர்பில் நான்கு வருடங்களின் பின்னர் மகன் கைது

பிரபல வர்த்தக பிரமுகர் குலாம்ஹ_சைன் கொலைதொடர்பில் அவரது இளையமகன் சபீர் அபாஸ் இன்று சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நான்கு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற கொலை தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2017 ஜூன் மாதம் 9 ம் திகதி குலாம்ஹ_சைன் அவரது வீட்டில்உயிரிழந் நிலையில் காணப்பட்டார். அடம்எக்ஸ்போர்ட் உட்பட 9 நிறுவனங்களின் உரிமையாளரான அவரின் மரணம் குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டு முறைப்பாடுகள் வெளியானதை தொடர்ந்து உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரதேச பரிசோதனை இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சிஐடியினர் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னர்தந்தையின் மரணம் தொடர்பில் 37 வயது இளைய மகன் சபீர் அபாஸ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலையை துல்லியமாக திட்டமிட்டு தந்தையின் மரணம் இயல்பானதொன்று என காண்பித்தார் இளைய மகன் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: