Press "Enter" to skip to content

கொள்கலன் வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

இரத்தினபுரி, கட்டன்டோலா பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற கொள்கலன் வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரொருபரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் பாரவூர்த்தி முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் என்பவற்றின் மீது மோதியுள்ளதுடன், பாலம் ஒன்றை உடைத்துக்கொண்டு ஆற்றில் விழுந்தமை காணொளியில் பதிவாகியுள்ளது.

காரிலிருந்த நபர் தெய்வாதீனமாக உயிர்தப்பிய நிலையில் விபத்துக்குள்ளான காரிலிருந்து குறித்த நபர் பாதுகாப்பாக வெளியேறும் காட்சி காணொளியில் பதிவாகியுளளது.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த காட்சிகள் வீதியில் பயணித்த பிறிதொரு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரின் தலைக்கவசத்தில் பொருத்தியிருந்த கமராவில் பதிவாகியுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: