Press "Enter" to skip to content

பொதுபல சேனாவின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் யாகம்!

பொதுபல சேன அமைப்பினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கொரோனா தொற்று நோயிலிருந்து நாடு விடுபட வேண்டி மாபெரும் யாகம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் கொவிற் தொற்று நிலைமை நீங்க வேண்டி சிறப்பு யாகம் இன்று இடம்பெற்றது.

இலங்கையில் உள்ள நான்கு கிருஷ்ணன் ஆலயங்களில் இவ்வாறான பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திலும் இப் பூஜை வழிபாடு இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து விடுபடுவதற்கு பொன்னாலை வரதராஜாப் பெருமான் ஆலயத்தில் இன்று விசேட யாக பூஜை வழிபாடுகள் இடமம்பெற்றன.

பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலய பிரதம குருக்கள் சோமஸ்கந்த சர்மா மற்றும் நயினை நாகதீபம் விகாராதிபதி மீககா வதுலே சிறீ விமல ஆகியோர் ஏற்பாடு செய்த இப் பூஜை வழிபாட்டில்
கலகொட அத்துரலிய ஞானசார தேரர் அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: