Press "Enter" to skip to content

வவுனியாவில் 104 வயது மூதாட்டியொருவர் கோவிட் தொற்றால் மரணம்

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக 104 வயது மூதாட்டி உட்பட 11 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 104 வயது மூதாட்டி உட்பட 11 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மரணித்த 11 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா, மூனாமடு கிராமத்தைச் சேர்ந்த 104 வயது  மூதாட்டியே மரணமடைந்தவராவார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: