Press "Enter" to skip to content

லொஹான் ரத்வத்தைக்கு எதிராகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதைத் தொடர்ந்து பதவிவிலகிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை கைதுசெய்யுமாறு கைதிகளின் உரிமைக்கான இயக்கம்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள கைதிகளின் உரிமைக்கான இயக்கம்

‘கடந்த 6, 12ஆம் திகதிகளில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகளுக்குள் பிரவேசித்து மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு எதிராக முறையிட்டுள்ளோம்.

அதில் அமைச்சருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் துப்பாக்கிப் பயன்பாட்டுச் சட்டத்தை வைத்து விசாரணை நடத்தும்படி வலியுறுத்தியுள்ளோம்.

அதேபோல, அனுராதபுரம் சிறைக்குள் உள்ள பாதுகாப்புக் கமெராக்களில் பதிவாகிய காணொளிகளை அழிக்கவும் அதேபோல சிறைப் பிரவேசத்தை பதிவுசெய்கின்ற புத்தகத்தின் பதிவுகளையும் அழிக்கவும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

அரசாங்கம் இவ்விடயத்தில் நீதியைப் பெற்றுக்கொடுக்கும் என எமக்கு நம்பிக்கையில்லை.

சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் பேச்சாளர்களும் இந்த விவகாரத்தில் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர்.

அசாத் சாலி மற்றும் ரஞ்ஜன் ராமநாயக்க விவகாரத்தில் அவர்கள் தமது கடமைகளை பரிபூரணமாக நிறைவேற்றிய போதிலும் அமைச்சர் லொஹான் ரத்வத்த விடயத்தில் அவ்வாறு செயற்படுவதில்லை.

அந்த அதிகாரிகள் இருவரையும் பதவிநீக்கம் செய்துவிட்டு விசாரணை செய்யும்படியும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: