Press "Enter" to skip to content

கடந்த 18 மாதங்களில் இலங்கையின் மனித உரிமை நிலைவரத்தில் பாரிய பின்னடைவு – ஐ.நா விசேட அறிக்கையாளர்

இலங்கையின் மனித உரிமை நிலைவரம் கடந்த 18 மாதங்களில் மிகவும் மோசமடைந்திருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீளிடம்பெறாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியொலி (Fabio Salviyoli) தெரிவித்துள்ளார்.

அவர் இலங்கை குறித்த தமது அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 48வது கூட்டத்தொடரில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் உண்மை மற்றும் நீதியைத் தேடுவதற்கான நடவடிக்கைகள் போதிய அளவு முன்னெடுக்கப்படவில்லை.

கடந்த 18 மாதங்களில் மனித உரிமை நிலைவரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பொறுப்புக்கூறல் விடயங்களிலும் முன்னேற்றமில்லை.

இந்த விடயங்கள் நிலைமாறுகால நீதி வழங்கல் செயல் முறையையும் பாதித்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயின் அரசாங்கம் தமது பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தச் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: