Press "Enter" to skip to content

அடையாளம் காணப்படும் தொற்றாளர்கலின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிசிஆர் சோதனைகள் குறைக்கப்பட்டுள்ளனவா?

நாளாந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அரசாங்கம் குறைத்துள்ளதுடன், இது கொவிட் -19 நாளாந்த தொற்றாளர்கள் கண்டறிதலில் 50% குறைப்புக்கு வழிவகுத்தது என அரச தாதிகள் அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான சமன் ரத்னப்ரியா தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அரசாங்கம் 9,672 பிசிஆர் சோதனைகளை மாத்திரமே முன்னெடுத்தது..தொற்றுகளின் எண்ணிக்கை 50%குறைந்துள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் திகதி 28,000 PCR மற்றும் RAT கள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டன என அவர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை 9,672 பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சோதனைகளின் எண்ணிக்கையில் RAT சேர்க்கப்பட்டபோது, இதற்கமைய ​​13,000 சோதனைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டது என ரத்னப்ரியா குறிப்பிட்டார்.
தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 2,300 அல்லது 2,400 ஆக குறைந்துள்ளது,
தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் வகையில் பிசிஆர் சோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: