Press "Enter" to skip to content

வன்னியூர் சஜிதா செயற்பாட்டாளரின் தன்னிலை விளக்கம் இது

#அனைவரும் #முழுமையாக
#படியுங்கள் #பகிருங்கள்…

தன்நிலை விளக்கம் கூறிவிட்டார் வெளியீட்டாளர்
என்நிலை விளக்கம் கூற வேண்டிய கட்டாய கடப்பாடு…
அதனால் தான் இப்பதிவு…!

காய்க்கின்ற மரம் தான் அடிக்கடி கல்லடி படும் என்பதற்கு நானே நல்லதோர் உதாரணம்தான்! சமூகசேவை என்று என்னாலான சேவையை செய்யத்தொடங்கிய காலத்தில் இருந்து, இன்று வரை எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பல சக்திகள் முயன்றிருக்கின்றது. அதனால்! சமூகத்திலிருந்து என்னை ஒதுக்கி விடலாம் என கனவு கண்டவர்கள் பலர்…!

இந்த வீடியோ எனது சொந்த விடயம். நான் மனசார காதலித்தவனை நம்பி, அவன் வார்த்தைக்கு கட்டுப்பட வேண்டிய சூழலால் வந்த வினை..! என்பது உண்மைதான். ஆனால் ஊடக தர்மம், மற்றும் முழுமையான ஆதாரம் இல்லாமை,
விடயத்தை வெளிப்படுத்தலின்போது சம்பந்தப்பட்டோருக்கு ஏற்படும் மன உளைச்சல், எதிர்காலப்பாதிப்பு, எதையும் கருத்தில் கொள்ளாது தமது இணையத்தள வியாபாரத்துக்காக, மிலேச்சத்தனமான பிழைப்புக்காக பெண்களின் மானத்தோடு விளையாடும், குறித்த இணையத்தளங்களால் தற்கொலை எண்ணத்துக்கு போகும் நிலை.
நானும் சராசரிப் பெண்தானே…
எனக்கென்ற வாழ்வை தீர்மானிக்கும் சக்தி… அதிகாரம்…விருப்பு…பொதுவானதே…. அந்த வகையில்! நான் நம்பியவன்! அவனின் நம்பிக்கை வார்த்தைகளின் விளைவு… விபரீதமானது…!

ஆனால் குறித்த நபரின் சில பழைய ஆதரங்களை என்னாலும் வெளியிட முடியும். ஆனால் அந்த நபரைப்போல் என்னால் கீழ்த்தரமாக சிந்திக்க முடியவில்லை. அவருக்கும் தங்கைகள், தம்பி இருக்கின்றார்கள்(கிளிநொச்சி).
நானும் ஒரு சராசரிப்பெண்ணாய் பெண்களின் மன உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து, அதனை வெளிப்படுத்த விரும்பவில்லை…

மாறாக எவரால் வெளியில் பகிரப்படுகின்றதோ அவர் மூலமாக தன்னிலை விளக்கம் ஒன்றை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம்… அதனால் தான் இந்த பதிவும் வெளியீடும்…

என்னை #விபச்சாரி என்று எழுதிய இணையத்துக்கு ஒன்று புரிய வேண்டும். தாங்கள் செய்வது #ஊடக #விபச்சாரம் என்பதை…
இந்த விடயத்தை ஊதியவர்கள்,தம்மை மறந்து
#கருத்துக்கள், (comments) போட்டவர்கள் தங்கள் வீட்டிலும், அக்கா, தங்கை, பெற்றதாய், உறவுகள் அனைத்திலும் பெண்மை பொதிந்திருக்கின்றது என்பதை உணருங்கள்…
இல்லையேல் அது உங்கள் சொந்தத்துள் #சூனியமாய் போகும்…!

இத்தனைக்கும் பின்னால் அரசியலும், அரசியல் பிண்ணணியின் காழ்ப்புணர்ச்சியுமே காரணம்.
நான் அரசியலை விரும்புபவளோ அல்லது ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவளோ அல்ல, இதனை நான் விரிவாக, பேசவும் விரும்பவில்லை…

யாவுக்கும் இடையில் விசமிகளின் பதிவுகளின் பின்னால் —
என்னை மதித்து சரிபிழையினை மதிப்பீடு செய்து, என் மனநிலையை புரிந்து கொண்டு, ஆறுதல் கூறிய அத்தனை அன்புறவுகளுக்கும் மனம்நிறைந்த நன்றிகள்🙏🙏🙏
உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க உங்களுக்காகவே என் பயணம். தொடரும்.

வன்னியூர் சஜீதா….

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: