Press "Enter" to skip to content

லொகான் மது போதையில்தான் பிஸரலை நீட்டினார். அது இனவாத நடவடிக்கை அல்ல. அரசியல் கைதி தெரிவிப்பு

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் தங்களை யாழ்ப்பாணத்திற்கு மாற்றும்படி வேண்டுகோள் விடுத்தனர் என நேற்று சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டநாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
லொகான் ரத்வத்தையின் நடவடிக்கை இனவாத நடவடிக்கையில்லை என கைதியொருவர் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.
13வருடம் சிறையில் உள்ள கைதியொருவர் ரத்வத்தை தன்னைநோக்கி 9எம்எம்பிஸ்டலை நீட்டியதாக தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எனினும் அதுஇனவாத நடவடிக்கையில்லை அவர் மதுபோதையில் காணப்பட்டார் என அந்த கைதி தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் சிறைக்கு வருவதாக முன்கூட்டியே அவர்களிற்கு அறிவித்திருந்தோம், நாங்கள் சென்றவேளை அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை நாங்கள் 45 நிமிடங்கள் வெளியில் காத்திருந்தோம் இதன் பின்னர் நாங்கள் சபாநாயகரை அழைத்து நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் சிறப்புரிமைகள் மீறப்படுகின்றன என்பதை தெரிவித்தோம், இதன் பின்னர் சபாநாயகர் எங்களை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை கோரவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: