Press "Enter" to skip to content

இரட்டை சிசுக்களில் ஒன்று கொரோனா தொற்றினால் மரணம்

மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில், 21 வயதான தாயொருவர் பிரசவித்த இரட்டை சிசுக்களுள் ஒன்று, பிறந்து 5 நாள்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.

மொனராகலை-ருப்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தாய், 13ஆம் திகதி பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினமே இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளார்.

பிரசவத்தின் பின்னர் நான்கு நாள்கள் கடந்து, தாய்க்கு செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் பிரசவித்த ஒரு சிசு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மற்றைய சிசுவின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை இன்று (20)வரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாய் கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: