Press "Enter" to skip to content

இவை அனைத்தும் தற்காலிகமான பிரச்சினைகள். இது ஒரு தற்காலிக நெருக்கடி நிலையாகும்-ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் அனைத்தும் தற்காலிக பிரச்சினைகள் அவை விரைவில் தீர்ந்துவிடும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண பாரிய கால்வாய் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் மககித்துல நீர்த்தேக்க நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை  குறித்து ஆராய்வதற்காக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றம் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கடந்த 2021-10-12 ஆம் திகதி  பொல்பிதிகம இருதெனிய மககிதுல பிரதேசத்திற்கு மேற்பார்வை விஐயம் மேற்கொண்டார்கள்.
 .
இந்த மேற்பார்வை விஐயத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது தொடர்பான கேள்விக்கு  பதில் அளித்த அமைச்சர் .
ஒப்பந்தங்கள் இருந்தால்  அவற்றில்  கையெழுத்திடப்பட வேண்டும். முதலீட்டாளர்கள் வரும் போது ஒப்பந்தங்களில் கைச்சாத்திடாமல் இருக்க முடியாது. இன்று அல்லது நாளை கைச்சாத்திடுவதாக  அர்த்தம் இல்லை. ஒரு முதலீட்டாளர்  வரும் போது விரைவில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு முடிக்க   நாட்டின் நிர்வாகத்துக்கு திறமை இருக்க வேண்டும் . அது  அமெரிக்க முதலீட்டாளர்களா  சீன முதலீட்டாளர்களா   இந்திய முதலீட்டாளர்களா  ஜெர்மன் முதலீட்டாளர் அல்லது பிரிட்டிஷ் முதலீட்டாளர் என்று பிரச்சினை கிடையாது . முதலீட்டாளர்களை கொண்டு வர முடியாது என்று எதிர்க்கட்சி கூறியது. இப்போது முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். எனவே இந்த கோவிட் தொற்றுநோய் இருக்கும் நேரத்தில் முதலீட்டாளர்கள் வந்துள்ளது குறித்து மகிழ்ச்சி அடைய வீண்டும் .
 எரிவாயு விலை உயர்ந்துள்ளது  எரிபொருள் விலை உயரும் அறிகுறிகள் இருப்பதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
இவை அனைத்தும் தற்காலிகமான பிரச்சினைகள். இது ஒரு தற்காலிக நெருக்கடி நிலையாகும் . கோவிட் தொற்றுநோயினால்  தான் இந்த நெருக்கடிகள் வந்தன .இந்த  அனைத்தும்  சில வாரங்களில் குறைந்துவிடும்.  பொறுமையாக இருக்குமாறு மக்களிடம் கோருகிறோம். சில வாரங்களில்  இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: