Press "Enter" to skip to content

மன்னாரில் கொரோனாவால் பெண் மரணம்!

மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை கொரோனா மரணம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில், மாவட்டத்தில் தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரே
நேற்று மாலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
வயோதிப பெண் கொரோனா தடுப்பூசி எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்டத்தில் தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
நேற்றைய தினம் மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், கடந்த 9 தினங்களில் மாவட்டத்தில் 160 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரையான காலப்பகுதிகளில் 2 ஆயிரத்து 553 கொரோனா தொற்றாளர்கள் மன்னாரில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *