ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ளதாக அந்த செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறியும் நிலையில், மக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து யோசனைகள், ஆலோசனைகளை கோரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், பொதுமக்கள் தமது கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, செயலாளர், அஞ்சல் பெட்டி- 504, கொழும்பு என்ற முகவரிக்கோ எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அனுப்பலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Be First to Comment