Press "Enter" to skip to content

கட்சிக்கு தெரியாமல் வெளிநாடு பயணமான சாணக்கியன் – சுமந்திரன்!

கட்சிக்கு தெரியாமல் வெளிநாடு பயணமான சாணக்கியன் – சுமந்திரன்!

0SHARES
Download Now & Watch Free

கட்சிக்கு தெரியாமல் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் – சாணக்கியன் மற்றும் இன்னுமருவர் இன்று இரவு அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அங்கு சில உத்தியோகப்பற்றற்ற சந்திப்புக்களில் ஈடுபட்ட பின்னர், அவர்கள் நாடு திரும்புவார்கள் எனவும் கூறப்படுகின்றது. அமெரிக்கா செல்லும் குழுவினர் 20ஆம் திகதி அங்கிருந்து புறப்படவுள்ளதாகவும், சுமந்திரன் தவிர்ந்த மற்றைய இருவரும் நாஅடு திரும்புவார்கள் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை சுமந்திரன் அங்கிருந்து பிரித்தானியா சென்று அங்கு சில தனிப்பட்ட சந்திப்புக்களை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது . இந்த சந்திப்பிற்கு சுமந்திரன் தனியாக செல்வதாகவே முன்னர் திட்டமிட்டிருந்தபோது , சாணக்கியனை முன்னிலைப்படுத்தும் அவரது முயற்சிக்கு உதவும் என்பதால், சாணக்கியனையும் அழைத்துச் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாணக்கியனிற்கும் விசா வழங்குமாறு அவர் கோரியதையடுத்து, பிரித்தானிய தூதரகம் நேற்று விசாவை வழங்கிய நிலையில் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு சென்ற சுமந்திரன், சாணக்கியன் பிரித்தானிய விசாவை பெற்றுக் கொண்டனர்.

அதோடு இதன்போது பிரித்தானிய தூதருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர். பிரித்தானியாவிலிருந்து கனடா செல்லும் இருவரும், அங்கு தமிழ் அரசு கட்சியின் கனடா கிளையினருடன் கலந்துரையாடல்களை நடத்தி விட்டு, 28ஆம் திகதி நாடு திரும்புவார்கள் எஅனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சுமந்திரனின் அமெரிக்க பயணம் பற்றி இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என கூறப்படுகின்றது.

பத்திரிகைகளில் செய்திகள் வெளியான பின்னரே, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை அறிந்திருந்ததாகவும் கட்சியின் முக்கிய எம்.பிக்களான சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் போன்றவர்களும் பத்திரிகையை படித்தே அவர்களின் பயணம் குறித்த தகவலை அறிந்து கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் கட்சியின் பல மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் , இது தொடர்பில் விவாதிக்க கட்சியின் மத்திய குழுவை கூட்டுமாறு கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சி தலைவரை வலிறுத்தியுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published.