அரச உத்தியோகத்தர்களுக்கு இனியும் நிதி ஒதுக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை மீளாய்வு செய்வதற்காக இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த பொது சேவை நம் நாட்டிற்கு ஒரு சுமை என்பதை நாம் நேர்மையாக ஒப்புக் கொள்ள வேண்டும். பொது சேவைக்காக இன்னும் ஓர் வருடம் முடியும் வரை எந்த பொது பணத்தையும் செலவழிக்க முடியாது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை விரிவாக்கவும் எமக்கு முடியாது. வருடாந்தம் ஓய்வு பெறும் நபர்களுக்கு அமைய இளைஞர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
Be First to Comment