இலங்கையின் எதிர்கால பயணம் டிஜிட்டல் மயமாக்கலில் தங்கியுள்ளது-நாமல்
By admin on November 13, 2021
இலங்கையின் எதிர்கால பயணம் டிஜிட்டல் மயமாக்கலில் தங்கி இருப் பது மிகவும் தெளிவானது எனவும் கொரோனா பரவலுடன் டிஜிட்டல் மயப்படுத்தலின் அதிகமான பயனை நன்கு உணர்ந்துகொள்ள முடிந் ததாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோயிலிருந்து விடுபடும் போது இலங்கை ஒரு தேசமாக உலகத்துடன் கொடுக்கல், வாங்கல் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
கிராமங்களில் உள்ள மக்களுக்கு டிஜிட்டல் கருவிகள் மூலம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் அந்த இலக்கு யதார்த்தமாக மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Be First to Comment