Press "Enter" to skip to content

மாமியாரைத் தாக்கிய மருமகன் கைது

மாமியாரைத் தாக்கிய மருமகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன் பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது:-

மேற்படி சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒரே வீட்டில் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் மாமி (மனைவியின் தாய்) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

நேற்றிரவு மதுபோதையில் வந்து மனைவியைத் தாக்கியபோது மாமியார் குறுக்கே வந்து மருமகனைத் தடுக்க முற்பட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மருமகன் தனது மாமியாரைத் தடியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

மருமகனின் தாக்குதலில் மாமியாரின் மண்டை உடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மருமகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published.