Press "Enter" to skip to content

20:20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று!

20 க்கு 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமான 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்த்தை எட்டியுள்ளது.
இத்தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
அந்த வகையில் நியூசிலாந்து அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இது இரண்டாவது 20 ஓவர் உலகக்கோப்பை இறுதி போட்டி ஆகும்.
ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது.
இரு அணிகளும் இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வென்றது இல்லை.
இதனால் முதல் முறையாக சம்பியன் பட்டம் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
2015-ல் ஒருநாள் உலககோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அவுஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது.
இதனால் இறுதிப்போட்டியில் பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளதாhல் இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இதுவரை 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
அவற்றில் 09 போட்டிகளில் அவுஸ்திரேலியாவும் 04 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வென்றுள்ளன.
ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இருபதுக்கு இருபது தரவரிசையில் நியூசிலாந்து அணி 04 ஆவது இடத்திலும் அவுஸ்திரேலிய அணி 06 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published.