திட்டமிட்டவாறு நாளை எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – ஐக்கிய மக்கள் சக்தி
By admin on November 15, 2021
அரசாங்கத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, நாளை (16) திட்டமிடப்பட்டுள்ள பாரிய எதிர்ப்புப் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பெருந்திரளான மக்கள் கூட்டம் கொழும்புக்கு வரவுள்ளதுடன், போராட்டம் இரத்து செய்யப்படாது என கட்சியின் பொது செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அடக்குமுறை முயற்சிகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்படி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக மக்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்பதால், நாளை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராஜித் சேனாரத்ன இதன் போது தெரிவித்தார்.
Be First to Comment