இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்களின் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் தேசிய கல்வியியற் கல்லூரிகளை கல்வி அமைச்சினால் ஆசிரியர் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதில் தாமதம் ஏற்பட்டமைக்காக இப் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட கல்லூரி விரிவுரையாளர் ஒருவருக்கு கொவிட் தொற்றிருப்பது துரித அன்டிஜென் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு தொற்றுக்குள்ளான விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தென் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் கலாசாலையொன்றின் 16 விரிவுரையாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனையின் படி கொவிட் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதேவேளை போராட்டக்காரர்கள் தம்மிடையே குளிர்பான போத்தல்களை பரிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது.
Be First to Comment