இனந்தெரியாத மர்ம நபர்களால் யாழ்ப்பாணம்- சுழிபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் சித்தங்கேணி சிவன் ஆலயத்துக்கு சென்று துவிச்சக்கர வண்டியை நிறுத்திய போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு இளைஞர்கள் அவரது சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது 3 3/4 பவுண் சங்கிலியில் அரைவாசி திருடனின் கைகளிலும் மிகுதி அந்த பெண்ணின் கைகளிலும் அகப்பட்டடது.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment