நினைவுகளுக்குள் புகுந்து குழப்புவதும், அந்த நினைவுகளுக்குரிய கதையாடிகளை தங்களுக்கு சாதகமானவர்களாக மாற்றிக் கொள்வதும் சிங்கள பேரினவாதம் மற்றும் சிங்கள பேரினவாதத்திற்கு துணை நிற்கக் கூடிய புவிசார் அரசியல் செய்து வருகின்றது என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தமிழீழ தேசியத்தையும் தமிழ் மக்களுக்கான பொது தேசியத்தையும் தமிழ் மக்கள் தேட வேண்டிய நீதிப்பாட்டையும் அரசியல் தீர்வுகளையும் முன்னெடுத்துச் செல்வதற்கு நமது ஈகங்களினுடைய நினைவுகளையும், அதன் புனிதத் தன்மையும் பேணப்பட வேண்டியது என்பது மிக மிக அடிப்படையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment