கிளிநொச்சி பழைய வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள தனியார் காணியை அளவீடு செய்ய முயன்றபோது, கிளிநொச்சி நகர கிராம அலுவலரை, அங்கு கூடியிருந்தவர்களின் எதிர்ப்பை மீறி அக்காணிக்குள் பொலிஸார் அழைத்தபோது, கடும் எதிர்ப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்திருந்தார்.
அத்துடன் கிராம சேவகரை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இடைமறித்தபோது, அங்கு நின்ற பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரினால் சிறிதரன் தள்ளி விடப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் கூடியிருந்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினரைத் தள்ளிய பொலிஸ் அதிகாரியுடன் முரண்படும் நிலையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் பொறுப்பதிகாரியால் தள்ளிவிடப்பட்ட ஸ்ரீதரன்: கிளிநொச்சியில் பதற்றம்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment