கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை தொற்றுடன் தியத்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு மேற்கொண்ட‘துரித அன்ரிஜென்’ பரிசோதனையின்போதே தொற்றுக்கு உள்ளாகியமை தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் தகனம் செய்யப்படும் என தியத்தலாவை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜீவந்த பிரசன்ன தெரிவித்தார்.
இதேவேளை, இந்தப் பிரதேசத்தின் கொங்கம ஆரம்பப் பாடசாலை அதிபருக்கும், மாணவர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது எனவும், அதனால் அப்பாடசாலை நேற்று முன்தினம் தொடக்கம் மூடப்பட்டுள்ளது எனவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மேலும் கூறினார்.
பாடசாலை மூடப்பட்டிருப்பதை பண்டாரவளை கல்வி வலயமும் உறுதி செய்துள்ளது.
அதிபருடனும், மாணவர்கள் இருவருடனும் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Be First to Comment