சாரதிப் பயிற்சி பெறாதவர்களுக்குக் கூட ரூ.12 ஆயிரம் செலுத்தி 5 நிமிடத்தில் போலி சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடப்படும் நிலையத்தை கொழும்பு கொம்பனி வீதியில்(ஸ்லேவ் ஐலண்ட்) குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களுடன், 27 போலி சாரதி அனுமதிப் பத்திரங்களும் அவற்றை அச்சிடப் பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. மேலும் காலாவதியான 41 சாரதி அனுமதிப்பத்திரங்களும் இங்கு மறு பதிப்பு செய்யப்பட்டுள்ளன.
மோசடிக்காரர்கள் போலி சாரதி அனுமதிப்பத்திரத்தில் அசல் சாரதி அனுமதிப்பத்திம் போல் சிப் அச்சிட்டுள்ளனர். இவற்றுக்குத் தேவையான பிரத்யேக ஸ்டிக்கர்கள் கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வாகனம் ஓட்டும் பயிற்சி இல்லாதவர்களுக்கும், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியாத வர்களுக்கும் கூட இந்த இடத்தில் நீண்ட காலமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
Be First to Comment