யாழ்.உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் மற்றும் ஏனைய உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment