மணமகனின் தலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகள் மணமேடையில் மயங்கி விழுந்த விநோத சம்பவம் உத்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உ.பி மாநிலம் எட்டவா பகுதியில் உள்ள பார்த்தனா பகுதியில்அண்மையில் திருமண நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் மணமகன் தலையில் விக் அணிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள், மணமேடையிலேயே மயங்கி விழுந்துவிட்டார் எனவும், இதையடுத்து உறவினர் அப்பெண்ணின் முகத்தில் நீர் தெளித்து அவரை எழுப்பிய போது அவர் மணமகனைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இருவீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் மணமகன் திருமணம் செய்யாமலேயே மண்டபத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது.
இச்சம்பவமானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment