களுத்துறை வடக்கு பகுதியில், கொழும்பு – கோட்டையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கைச் சேர்ந்த 28 வயதான ராஜேந்திரம் சனாதனன் என்பவரே உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, களுத்துறை கல்லூரிக்கு முன்பாக சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது எனக் களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் கூறினர். (K)
Be First to Comment