தரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையில் பெலாரஸ் நாட்டில் இடம்பெற்ற பேச்சு வார்த்தை சற்று முன்னர் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தூதுக்குழுக்கள் தற்போது தங்கள் நாடுகளின் தலைநகரங்களுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலின் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் ஊடகங்களுக்கு இதுவரை வெளியிடப்படவில்லை.
Be First to Comment