Press "Enter" to skip to content

வரலாறு தெரியாதவர்களை வைத்து கையொழுத்து வேட்டை நடக்கின்றது

இந்த தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனையை தீர்க்க கூடிய தகுதி தத்துவம் எல்லாம் உள்ள ஒரே ஒரு கட்சி தமிழ்விடுதலை கூட்டணி மாத்திரம் தான் ஒழிய வேறு எந்த கட்சியாலும் முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள விடுதி ஒன்றில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழ் மக்கள் நாளுக்கு நாள் வேறு வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி செல்லுகின்றனரே தவிர உண்மையில் நாட்டிலே எந்த பிரச்சனை இருந்து அதற்கு என்ன தீர்வு காண ஆரம்பித்தோமே அதை எல்லாம் படிப்படியாக மறந்து இப்ப புது புது பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் இனப்பிரச்சனை தெரிவிக்கும் போது எங்களுடைய அத்தனை பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு கட்சி ஆரம்பித்து வருகின்றது. இதனால் உண்மையான தமிழ் மக்களின் பிரச்சனை வழுவிழந்து போகின்றது இதனை எவரும் உணர்வதாக இல்லை.

எங்களுக்கு முக்கியமான பிரச்சனை இனப்பிரச்சனை. அதனை எத்தனையே விதமாக தீர்க்கலாம். இரகசியமாக தீர்கவேண்டியதை ஒருவரும் சிந்தித்து பார்க்கவில்லை. எங்களுடைய தலைவர்களின் கோரிக்கையை இந்தியா அரசாங்கம் தலையிட்டு இன்ன இன்ன பிரச்சனைக்கு இன்ன தீர்வுதரவேண்டும் என இந்திய அரசாங்கத்தை வற்புறுத்தி தீர்வை கோரி அதனை இந்திய அரசாங்கம் முன்வருமாக இருந்தால் இங்கே எதிர்ப்பு தான் கூடிக் கொண்டுபோகுமே தவிர ஆதரவு கிடைக்காது.

ஆகவே நாங்கள் சிந்திக்காதளவுக்கு சிந்திக்கின்றவர்கள் இருக்கின்றனர். எனவே உள்நாட்டில் இந்த பிரச்சனையை தீர்க்கவேண்டும் ஒரு நாட்டின் உதவி கேட்கின்ற போது சம்மந்தப்பட்ட நாடு இலகுவாக சம்மதிக்குமா? என சிந்திக்கவேண்டும். எனவே இதற்கு முக்கிய காரணம் இவர்களுக்கு இராஜதந்திரம் தெரியவில்லை.

இவர்கள் என்ன என்ன கேட்கின்றார்களே அதே விஷயங்களை நான் கேட்டிருக்கின்றேன். சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள கூடிய தீர்வை நான் முன்வைத்தவன். அது இந்திய ஆட்சி முறையை தான். எனவே இந்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்தற்கு மேலாக கடுகளவும் கேட்கமுடியாது அவர்களும் தரமாட்டார்கள்.

இன்று எமது தலைவர்களின் அணுகுமுறை முற்று முழுதும் ஏற்ககூடியது அல்ல அது எங்களுக்கு தீங்கைத்தான் விழைவிக்கும். அன்றில் இருந்து இன்றுவரை அவர்கள்தான் தலைவர்கள் நாட்டிலே எத்தனையே படித்த புத்திஜீவிகள் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றபோது என்ன என்ன கோலத்தில் வந்த ஒரே கோஷ்டிதான் இவர்கள் இந்த பிரச்சனையை தீர்க்க உதவவில்லை தீர்க்க முடியாமல் செய்கின்றனர்.

13 வது திருச்தச்சட்ம் இந்திய அரசு வாதாடி பெற்ற விடையம் எல்லோருக்கும் தெரியும் 13 திருத்தத்தில் அதை புகுற்றவேண்டும் என ஒருபகுதி 13 வது வேண்டாம் என ஒருபகுதி தெரிவித்து வருகின்றனர். சமஷ்டி முற்று முழுதாக நிராகரிக்கப்பட்ட விடையம் எந்த அரசு வந்தாலும் சமஷ்டியை கொடுக்காது ஏன் என்றால் ஒரு சந்தர்பத்தில் சமஷ்டி கொடுக்கப்பட்டது 2006 ரணில் விக்கிரமசிங்க சமஷ்டியை முன்வைத்து போட்டி போட்டவர் அப்போது எதிராக மகிந்த ராஜபஷ்ச ஒற்றை ஆட்சியைவைத்து போட்டிபோட்டார்.

ஒற்றை ஆட்சிக்கு 50.2 வீதமானதும் சமஷ்டிக்கு 49.2வீதமான வாக்கு கிடைத்தது அப்போது எமது தலைவர்கள் வீடுவீடாக சென்று தேர்தலில் வாக்களிக்கவேண்டாம் தேர்தலை பஷ்கரிக்குமாறு கோரினர். அன்று எமது மக்கள் வாக்களித்திருந்தால் வாக்களித்திருந்தால் 3 இல் 2 ரணில் பெற்று சமஷ்டி தீர்வை பெற்றிருக்க முடியும் ஆனால் இப்படி காலத்துக்கு காலம் வந்த வாய்ப்புக்களையும் இழந்து வருக்கூடிய வாய்ப்புக்களுக்கு முற்றுக்கட்டையிட்டு உள்ள தலைமை மாறவேண்டும்;

பயங்கரவாத தடை சட்டம் எப்போ வந்தது. அது வரும் போது நாங்கள் பாராளுமன்றத்தில் இருக்கின்றோம். அப்போது ஏதே ஒரு காரணத்தை சொல்லி அது நடந்திருக்கலாம் அதில் நாங்கள் தப்பு பண்ணி இருக்கலாம். ஆனால் தப்பி பண்ணி இருக்க முடியாது ஏன் என்றால் பெரும்பாலனவர்களின் ஆதரவுடன் ஒரு சட்டதை கொண்டுவந்தால் அதை எதிர்கலாம் ஒழிய இல்லாமல் செய்யமுடியாது. ஆகவே அப்போதைய எங்கள் தலைவர்களை குற்றம் செல்லமுடியாது.

இந்த சட்டம் அங்கிகரிக்கப்பட்டு 40 வருடத்துக்கு மேலாக உள்ளது இந்த பயங்கரவாத தடை சட்டம் ஏதே இப்போது வந்தது என்ற மாதிரி பாடசாலை பிள்ளைகள் வந்து கையொழுத்து வைக்கின்றனர் என்ன கையொழுத்து வேட்டை பயஙகரவாத தடை சட்டத்தை நீக்கு என இதனை அரசு செய்யுமா?

தமது பலம் குறைந்து கொண்டு போகின்ற நிலையில் வரலாறு தெரியாத ஆட்களை வைத்து அரசியல் செய்கின்றனர். அரசியல் தெரியாவிட்டால் நான் சொல்லி தருகின்றேன் முதலில் நாங்கள் இராஜதந்திரத்தை கற்றுக் கொள்ளவேண்டும்.

இந்த கையொழுத்து வேட்டையால் தனிப்பட்ட முறையில் செல்வாக்கை பெற்றுக் கொள்ளலாமே தவிர அனை கூட்டி பார்க்கும் போது அது எங்களுக்கு பாதகமாக முடியும். ஆகவே இந்த 13 வது திருத்தச் சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம். இந்திய தலையீடு, ஐ.நாடுகள் சபை, இப்படியானதை வைத்து அரசியல் செய்கின்றனர்.

இந்த பிரச்சனையை தீர்கவேண்டும் என்றால் 13 வது திருத்தசட்டம் நல்லது இதற்கு அரசாங்கம், மற்றும் சிங்களவர்கள் உட்பட பல புத்திஜீவிகள் ஆதரித்து வரவேற்றுள்ளனர். எனவே இன்றுவரைக்கும் தமிழ் மக்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காது செய்து கொண்டிருக்கின்றீர்கள் அது எங்கே போய் முடியப்போகின்றது என தெரியாது எனவே நீங்கள் செய்வது பெரிய தப்பு

எனவே எது நடக்கும் எது செய்ய கூடியது எது செய்யக் கூடாது எது இன்று செய்யமுடியுமே அது பின்னுக்கு செய்யமுடியாது என சிந்திக்க கூடிய திறமை உள்ளவர்கள் எம்மத்தியில் இருக்கின்றனர். எனவே நல்ல கற்றர்கள் எல்லோரும் அரசியலில் வாருங்கள் என எனது வேண்டுகோள்.

அதனை விட்டு 6 பேர் மட்டும் போகாட்டால் என்ன போனால் என்ன என்று சொல்லுகின்றவர்கள் தான் இன்று தலைவராக இருக்கின்றனர். எங்கள் மத்தியில் இருக்கின்ற துன்பமான விடையம் பதவி பதவியை தவிர எங்களுடைய மக்களின் எதிர்காலத்தை பற்றியே இஸ்லாமிய மக்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் உறவுகள் அவர்கள் தமிழ் மொழி பேசபவர்கள். எனவே அவர்களை தந்தை செல்லா தமிழ்பேசும் மக்கள் என்று உருவாக்கியவர். அவர்கள் எமது கட்சி ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தமை சிங்களவர்கள் எமது சகோதரர்கள் எமக்கும் அவர்களுக்கும் இருக்கும் பிரச்சனையை தீர்க்கலாம் அதை தீர்க்க கூடியவை சிந்தனை யாருக்கு வருகின்றது.

வரலாறு தெரியாதவர்களை வைத்து கையொழுத்து வேட்டை நடக்கின்றது. எங்கள் இனத்தை காப்பாற்ற இந்த சந்தர்ப்பதை விட்டால் நாங்கள் அழிந்து என்றைக்கும் தீர்க்க முடியாதா ஒரு சமூதாயம் சிங்களவர் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் வெறுப்புடன் வளர்ந்து வருகின்றது.

எங்களுக்கு கிடைத்த 10 பேர் இருக்கின்றனர் அவர்கள்தான் அரசில் செய்துவருகின்றனர். இது ஒதுக்கப்படவேண்டியது எத்தனையே படித்த நிபுணர்கள் இருக்கின்றனர். எனவே நான் தலைமைகளிடம் மன்றாட்டமாக கேட்கின்றேன் பதவி, உட்பட எல்லாத்தை மறந்து பழைய சிந்னைகளுடன் இருகின்றவர்கள் இருக்கும் போது இந்த இனப்பிரச்சனை தீர்க்கபட வேண்டும் என்றார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *