நாட்டில் 7 லட்சம் பேர் எந்தவொரு தடுப்பூசியும் பெறவில்லை -மருத்துவர் ஹேமந்த ஹேரத்
By admin on March 5, 2022
நாட்டில் சுமார் 07 இலட்சம் பேர் இதுவரை எந்த வொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இதுவரை 169 இலட்சம் பேர் முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண் டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 72 இலட்சத்தை தாண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Be First to Comment