யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீதநாத் காசிலிங்கம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் கலந்துகொண்டு டீ குடித்துவிட்டுஒரு வடையும் சாப்பிட்டு செல்லலாம் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமரினால் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் பிரதமர் அலுவலக பிரதிநிதியாகவே கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் கலந்து கொண்டு விட்டு ரீ குடித்து வடை சாப்பிட்டுவிட்டு செல்லலாம் அவர் பிரதமர் அலுவலகத்தின் ஒரு பிரதிநிதியாக இந்த கூட்டங்களில் கலந்து கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
Be First to Comment