வடமாராட்சி மற்றும் தென்மாராட்சி உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களுக்கும், கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் பற்றிய தனது எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக செயலாளர் நாயகத்தினால் தெளிவுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment