Press "Enter" to skip to content

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு கடும் நிபந்தனைகளை விதித்தது இந்தியா?

இலங்கைக்கு இந்தியா கொள்கையளவில் உத்தரவாதமளித்த ஒரு மில்லியன் டொலர் கடன் தொகை இலங்கை அரசாங்கம் உத்தரவாதங்களை அளிக்கின்ற வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது
இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தனது பொருளாதார நெருக்கடியை எவ்வாறு நீண்டகால அடிப்படையிலும் குறுகிய கால அடிப்படையிலும் கையாளப்போகின்றது என்பது குறித்த திட்டமொன்றை முன்வைக்குமாறு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் வடக்குகிழக்கில் இந்தியா நீண்டகாலமாக முன்னெடுக்கவிரும்பும் அபிவிருத்தி திட்டங்களிற்கான தடைகளை நீக்கவேண்டும் எனவும் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை இது குறித்த உறுதிமொழியை வழங்கும்வரை இந்தியா இந்த உதவியை வழங்குவது நிச்சயமற்றதாக காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த டிசம்பரில் இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் உதவியை பெற்ற நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அத்தியாவசிய பொருட்கள் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவிடமிருந்து ஒரு மி;ல்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இரண்டு தடவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் பெற்றுக்கொண்ட கடனை இந்தமாதம் இலங்கை மீள செலுத்தவுள்ளளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள அந்நிய செலாவணி மற்றும் கடன்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நீண்டகால திட்டம்,மற்றும் இலங்கையில் இந்தியா ஆரம்பிக்கவிரும்பும் பொருளாதார திட்டங்கள் குறித்த பட்டியல் ஆகியவற்றிற்கான பச்சைக்கொடியை இந்தியா அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவோ இலங்கையோ இதுவரை இது குறித்து உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் கோரிக்கைகள் திருகோணமலை துறைமுகத்தை சுற்றி இந்தியாவின் மூலோபாய நலன்களை உறுதி செய்யும் கடல்சார் பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக இந்தியாவின் கோரிக்கைகள் காணப்படுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு டோனியர் கண்காணிப்பு விமானங்களை வழங்குவது திருகோணமலையில் இலங்கை கடற்படைக்கு கப்பல் பழுதுபார்க்கும் தளத்தை வழங்குவது ஆகியவேண்டுகோள்களையும் இந்தியா விடுத்துள்ளது.
மேலும் குருகிராமில் உள்ள இந்திய கடற்படையின் இந்திய பெருங்கடலிற்கான தகவல் இணைப்பு மையத்திற்கு கடற்படை தொடர்பு அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு
இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
குருகிராமில் உள்ள இந்த நிலையம்வர்த்தக கப்பல்களையும் கடல்சார் பயங்கரவாதம் கடல்கொள்ளை போன்றவற்றையும் கண்காணிக்கின்றது.
இலங்கை அதிகாரி பத்துநாடுகளின் அதிகாரிகளுடன்இணைந்து செயற்படுவார்
இந்திய அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்களில் ஒன்றாக திருகோணமலை அதனை சுற்றியுள்ள சம்பூர் பகுதிகளில் புதுப்பிக்கதக்க எரிசக்தி( solar )திட்டத்தை தொடங்குவது காணப்படுகின்றது.இந்திய அரசாங்கத்தின் முக்கிய அழுத்தங்களில் ஒன்றாக இது காணப்படுகின்றது.\
ஜப்பானுடன் இணைந்து குறிப்பிட்ட பகுதியில் நிலக்கரிசக்தி திட்டத்தை முன்னெடுக்கும் இந்தியாவின் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
தனது எதிர்கால மின்சக்தி திட்டங்களிற்கு நிலக்கரியை பயன்படுத்துவதில்லை என இலங்கை அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பலாலி விமானநிலையத்தினை வர்த்தக நடவடிக்கைகளிற்காக திறப்பது மற்றும் யாழ் குடாநாட்டில் பல்வேறு கலாச்சார திட்டங்கள் போன்றவற்றை இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ளது.
நெடுந்தீவில் புதுப்பித்தக்க எரிசக்தி துறையில்) முதலீடு செய்வதற்கு இந்தியா விரும்புகின்றது.
ஆசியஅபிவிருத்தி வங்கியின் கேள்விப்பத்திர முறை மூலம் சீன நிறுவனம் இதற்கான அனுமதியை பெற்றது எனினும் இந்தியா இந்த திட்டத்தை இரத்துச்செய்யவைத்துள்ளது.
இலங்கைக்கு இந்தியா கொள்கையளில் உத்தரவாதமளித்த ஒரு மில்லியன் டொலர் கடன் தொகை இலங்கை அரசாங்கம் உத்தரவாதங்களை அளிக்கின்ற வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
ஒரு பில்லியன் டொலர் கடனிற்காக இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாததால் அந்த விஜயம் குறித்து உத்தியோகபூர்வமாக கருத்து கூறுவதற்கு இந்திய தூதரகம் மறுத்துள்ளது என சண்டேடைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் அவசரஉத்தியோகபூர் பயணத்தை மேற்கொண்டு பாரிஸ் செல்லவுள்ளதால் இலங்கை நிதியமைச்சரின் விஜயம் பிறிதொரு திகதியில் இடம்பெறும் என கடந்த வாரம் இந்திய தூதரகம் அறிவித்திருந்தது.
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *